சொல்வன்மை (65) – 647 Power of Speech

சொல்வன்மை (65) – 647   Power of Speech

சொல்வல்லன்  சோர்விலன் அஞ்சான் அவனை

இகழ்வெல்லல் யார்க்கும் அரிது.

No foe defies the speaker clear                    647

Flawless, puissant, and free from fear.

விளக்கம் : நல்ல பொருளுடைய வலுவான  நற்சொற்களை உபயோகித்தலும், சோர்வில்லாமிலும் , எந்த நிகழ்விற்க்கும் அஞ்சாமால் தான் மேற்கொண்ட காரியத்தை செய்பவனை, யாராலும் இகழ்ந்து பேசியோ,அல்லது அவமான படுத்தியோ,பலத்தினோலோ வீழ்த்தி விட முடியாது.

இந்த குறளுக்கு ஒரு நல்ல உதாரணத்தை  நாம் யோசித்து பார்த்தால் , பல நபர்களின்/ தலைவர்களின் தோல்வியும் , அவர்களின்  வார்த்தை பிரயோகத்தினால் வந்த கேடும் நமக்கு நினைவுக்கு வரும்,

ஆனால் ஒர்  உதாரணத்திற்கு..

ராமாயணத்தில்  அனுமானின் கதா பாத்திரத்தை சற்று யோசித்துப் பார்ப்போம்.

அனுமான்  சொற்பிரயோகத்தில் மிக தெளிவாக பேசுவார், ( உதாரணமாக  முதன் முறையாக  ஶ்ரீ.ராம, இலக்‌ஷமணர்களை வனத்தில் சந்திக்கும் போது  “அவர்கள் யார் என்று தெரியாத போது மரியாதை நிமித்தமாக “ சமஸ்கிருத்ததில்(மொழி)  நல்ல தேர்ந்தெடுத்த  இதமான வார்த்தைகளை கொண்டு பேசி தன்னை அறிமுக படுத்திக் கொள்வது,

இலங்கை அசோகவனத்தில் சிம்சுக மரத்தினடியில் தூக்கிட்டு  சாக சீதாதேவி  முயற்சிக்குக்கும் தருணத்தில்  “ தசரத புத்திரன் ஶ்ரீ.ராமனின் தூதன்” என்று ஆரம்பித்து  பாடி , சீதாதேவிக்கு மனநிம்மதியை கொடுப்பது.

இராவணனின் மந்திரி சபையில் தான்  தூதுவனாய்  வந்து இருப்பது தெரிந்தும் மதித்து உட்கார ஒரு ஆசனம் கூட தராததானல் தன் வாலாலேயே ஒரு பெரிய மேடை அமைத்து  ராவணனுக்கு சரிசமாய்  உட்கார்ந்து கொண்டு  உபதேசித்தல்,  அதை கேட்டு விபிஷணன் மன மாறுதல் அடைந்தது.

இலங்கையின் இராவணன் அரசவையில் அனுமனின் வாலில் நெருப்பு வைத்து தண்டித்த போதும்  சோர்ந்து விடமால்  திரும்ப வீறு கொண்டு  இலங்க தகனத்தை செய்தது.

ஶ்ரீ ராமனை சந்திக்கும் போது ,”கண்டேன் சீதையைய்  என்று கூறி  என்று ஒரு ஷண நேரத்திற்கு கூட ஒரு ஶ்ரீ ராமனுக்கு ஒரு எதிர்பார்ப்பு ஆவலை தவிர்த்தல் ,

விபிஷணனின் சரணாகதியை சரியே என்று சுக்கிரீவனுக்கு தெளிவாய் உணர்த்துதல்

போரில் ராம இலஷ்மணர்கள்  இராவணனின் மகன் இந்திரஜித் ( மேகநாத்)தின்  நாகஸ்திரத்தில்  கட்டுடண்டபோது தன் தலைவனின் நிலை கண்டு   அனுமான் துவண்டு போய் விடமால் , விவேகத்துடன் உடனே மருந்து தேட இமயமலைக்கு கிளம்பி, தேட கால அவகாசம்  இல்லாததானால் சஞ்சிவி மலையையே  கொண்டு வந்து  அவர்களின் மயக்கம் தெளிவித்தல் போன்ற சகல நிகழ்வுகளிலும்

அனுமனின் சொல் திறமையும், சோர்வில்லா தன்மையும்,எந்த இடர்பாடுகள் வந்தாலும் எதிர்த்து துணிந்து போராடுதல் குணங்கள் கொண்டது தெளிவாய்  புரியும்.

இராமாணயத்தில்  ஶ்ரீ ராமனின் செயல்பாடுகளில் கூட சிலருக்கு  மாற்று கருத்துகள் இருக்கும், ஆனால் அனுமானின் செயல்களில் மாற்றுக் கருத்துக்களே இருக்காது.

மெய்யுணர்தல் (36) – 351 Truth consciousness

மெய்யுணர்தல் (36) – 351   Truth consciousness

பொருள்அல்ல வற்றைப் பொருள் என்று உணரும்

மருளான்ஆம்  மாணாப் பிறப்பு

That error entails ignoble birth                  351

Which deems vain things as things of worth.

விளக்கம் : மனிதன் தன் வாழ்வில்  உண்மையான பொருள் அற்றவைகளை பொருள் என்று எண்ணி தேடி அலைந்து தன் மொத்த வாழ்க்கையையே பயன்யற்றத்தாய் வாழ்ந்து மேலும் மேலும் பல பயன்யற்ற பிறப்பிற்கு வழி வகுத்துக் கொள்கிறான்.

நகைச்சுவையாய் ஒரு ரமண மகரிஷியின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு பக்தர் அத்மஞானம் பெற ரமண ஆசிரமத்திற்கு வந்தார். அப்பொழுது அங்கு  ஆசிரமத்தில் பொருட்கள் சரியாக பாராமரிக்க படவில்லை, பக்தர்களின் நடவடிக்கைகள் சரியில்லை,ஆசிரமத்திற்கு சொத்துக்களே, இல்லை, ரமணர் தேசந்திரமாய் போய் தன் கொள்கைகளை பரப்ப வேண்டும் என்று பல குறைபாடுகளையும், யோசனைகளையும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்..  ரமண மகரிஷி  பார்த்துக்கொண்டே இருந்தார், ஒருநாள் ரமணர் அவர் அருகில் வந்து , வந்த வேலையை பாரும் ஓய் ! என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.  அப்பொழுதுதான் அந்த பக்தருக்கு மனதில் தெளிவு பெற்றார். ( அவர் ஆசிரமத்திற்கு வந்தது ஆத்மஞானம் பெறுவதற்குகாக , அதை விட்டு விட்டு  மற்ற பொருள்களும் ,பதவி போன்ற பற்றுகளை பற்றிய நினைவுகளால் ஈர்க்கப்பட்டது தன் மொத்த நேரத்தையும்,தன் முயற்சியையும் வீண் அடித்ததை தெரிந்து தன்னை திருத்திக் கொண்டார்.

உழவு (104) – 1039 Farming

உழவு (104) – 1039   Farming

செல்லான் கிழவன் இறப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

If landsmen sit sans moving about    1039

The field like wife will sulk and pout.

விளக்கம் :  உழவன் தன் உழவு தொழிலை சிரத்தையாக செய்யாமால் வேறு காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் , இல்லறத்தில் ஈடுபட்டு கொண்டு வீட்டில் தலைவனின் பங்களிப்பு இல்லாது பொழுது  இல்லாளும் தலைவனை விலக்குவது போல அவனின் நிலமும் உழவனை விலக்கும்.

விரிவாக :

இப்பொழுது விவசாயம் இலாபம் இல்லாத தொழில் , உழுதவன் கணக்கு பார்த்தால் உழகுக்கூட ( அளவு படி) மிஞ்சாது, அதிக உழைப்பு குறைந்த இலாபம் என்று பல காரணங்களை சொல்லி சில உழவர்கள் தங்கள் கவனத்தை விவசாயத்தில் காட்டமால் வேறு விஷயங்களான லேவா தேவி ( பணம் வட்டிக்கு விடுதல் ) , அரசியலில் ஈடுபடுதல், கமிஷன் தரகு வியாபாரம், வாகனம் ஓட்டுதல், என்று விவசாயத்தை சற்றும் சாராத தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மொத்தமாக விவசாயத்தை விட்டு விலகியோ , அல்லது வேண்டவெறுப்புடன் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்,

எல்லா தொழில்களிலும் அதை செய்பவர்களுக்கு கஷ்டம் நிச்சயமாய் இருக்கும், கம்பியூட்டர் தொழில் வேலை செய்பவர்களுக்கு தான் அந்த வேலையில் உள்ள கஷ்டம் தெரியும், முடி திருத்துவோர்களிடம் போய் கேட்டால் நான் நின்றுக் கொண்டே வேலை செய்கிறேன் , கடை வாடகை அதிகம் ஆகிவிட்டது என்று பல கஷ்டங்களை சொல்லுவார்கள். சமீப காலங்களில் விவசாயிகள் மிக அதிகம் கஷ்டப் படுவது போல ஒரு தோற்றம் தெரிகிறது, தண்ணீர் வசதி இல்லை, உரம் விலை அதிகமாய் விட்டது, கொள்முதல் விலை அதிகமாகவில்லை என்று பற்பல காரணங்கள் கூறப் படுகிறது. இவ்வாறு பல காரணங்களை சொல்லி தன் கடமைகளை தவிர்த்தால் நிலம் தன் வளத்தை உழவனுக்கு கொடுக்கமால் நஷ்டத்தை தான் கொடுக்கும் என்று வள்ளுவர் தெளிவாக உணர்த்துகிறார்.

தமிழில் ஒரு சொல் வாடை உண்டு.

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.

தெரியாத தொழிலை செஞ்சவனும் கெட்டான்

.

தங்கள் செய்யும் தொழில்களில் தங்களை மேன்படுத்தி கொள்ள விட்டால் எந்த தொழில் செய்தாலும் நஷ்டம்தான் வரும்.

நவீன உழவு உத்திகளை பயன் படுத்தி உழவு தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகும், கணக்கிடுதல் புதிய முயற்சிகள், இயந்திரமயமாக்குதல் ,சொட்டு நீர் பாசனம்,பூச்சிகளிலிருந்து காத்தல் பாதுகாப்பு, விலை நிர்ணயித்தலில் வணிக யுத்திகள் போன்ற வகையில் தன்னை வளப்படுத்திக் கொண்டு உழவு தொழில் ஈடுபடுதல் அவசியமாக கொள்ள வேண்டும்.

“ஆங்கிலத்தில் ஒரு “ Sharpen the Saw என்று வார்த்தை பிரயோகம் உண்டு, ஒரு மரம் வெட்டி தன் கோடாரியை தினம் கூர் படுத்தாவிட்டால் அவன் வேலையும் கஷ்டமாய் தான் இருக்கும்

எந்த தொழிலில் ஈடுபட்டவனும் அதில் முழு முயற்சியிடன் ஈடுபடவில்லையென்றால் அதில் நஷ்டம் அடைய அதிகம் வாய்ப்புகள் உண்டு.

தெரிந்து வினையாடல் (52) – 512 Testing and Entrusting

தெரிந்து வினையாடல் (52) – 512   Testing and Entrusting

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை ..

Let him act who resource swells;  512

Fosters wealth and prevents ills.

விளக்கம்  ஒரு காரியம் செய்து தன்னை வளபடுத்தி கொள்ள விருப்ப படுபவர் , செய்ய வேண்டிய அவசியமானது செயல் வினை , அதாவது காரியத்தை தொடங்குதல்,

விரிவாக :

ஒருவன் தன் வளங்களையும், செல்வங்களையும் அதிகப் படுத்திக் கொள்ள விரும்புவர்கள் , அந்த காரியத்தை பற்றி நன்கு ஆராய்ந்து, அதில் உள்ள இன்ப , துன்பங்களை பற்றியெல்லாம் ஆராய்ந்து வைத்து இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய தயங்குவர்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்காது,

எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது இழுக்கு என்றும் சொல்லுகிறார் வள்ளுவர், அதாவது ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்பே அதை பற்றி எண்ணுவது சரி , ஆனால் எண்ணிக் கொண்டே இருந்தால் ஒரு வளமும் வர போவதில்லை.

காரியத்தில் துணிந்து இறங்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் , கங்கை ஆற்று படித்துறையில் நின்று கொண்டிருந்தால் குளிக்கின்ற சுகம் கிடைக்காது. செயலில் ஈடுபடுதலும் அதை பற்றி ஆராய்ந்து, வளம் படுத்துபவனிடம் எல்லா செல்வங்களும், தோல்வியை கண்டு அஞ்சாமை போன்ற குண இயல்புகளும் கிடைக்கும்.

வடமொழியில் ஒரு சொல் வாடை உண்டு , “ சிந்தா காரிய வினாசினி” ( சிந்தனை பண்ணிக் கொண்டே இருத்தல் அந்த காரியத்தை தொடங்க ஒரு பெரிய தடையாகும், ஆராய்ந்து சிந்தித்த உடன் காரியத்தை ஆரம்பித்து விடவேண்டும். )

( ஒரு நகைச்சுவைக்காக மஹாபாரத்தில் கிருஷ்ணனிடம் அருச்சுன் கீதா உபதேசம் கேட்ட பின் அந்த உபதேசத்தை பற்றி மேலும் சிந்திக்கமால் செயல் இறங்கினான் வெற்றி பெற்றான். அந்த உபதேசத்தை பற்றி மேலும் மேலும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்க வில்லை )

Just do it

Beginning of First Step leads to Great Achievement

இனியவை கூறல் (10) – 95 Sweet Words

இனியவை கூறல் (10) – 95   Sweet Words

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற .

To be humble and sweet words speak  95

No other jewel do wise men seek.

 

விளக்கம்  பணிவும், இன்சொல் பேசுதலும் ஒருவர்க்கு பிறர் மத்தியில் அடையாளம் காட்டும் மிகப்பெரிய குணங்களாகும் இந்த குணங்கள் இல்லாமல் அவர் எவ்வளவு பணம் பதவி,பொருள் கல்வி என்று எதை பெற்று இருந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

விரிவாக :

ஒரு கம்பெனியில் மேனேஜிங் டைரக்டர் இருந்தார் , அவருக்கு உண்மையான பெயர் ஒன்று இருந்தாலும் ஒவ்வொரு துறையிலும் அவர் கீழ் பணி புரியும் தொழ்லாளிகள் ஒவ்வொரு பெயர் வைத்திருப்பார்கள், கரடி, வேட்டை நாய், இரத்த காட்டேரி என்று   பல அடைமொழி வைத்து பேசுவார்கள். அவர் நிரம்ப படித்தவர்தான், தொழில் திறமை அதிகம் கொண்டவர்தான், கம்பெனிக்கு இலாபம் ஈட்டி தந்துக் கொண்டு தான் இருக்கிறார். இருந்தாலும் அவரால் தொழிலாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெறமுடியாவில்லை. காரணம் இன்சொல் என்பது அவரின் அகராதியிலேயே கிடையாது.

ஒரு பிரபல கல்லூரி முதல்வர் இருக்கிறார் நல்ல தொழில் திறமையும், நல்ல செல்வாக்கும் கொண்டவர்தான், கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளிடம் அவர் ஒரு நாளும் இனிமையாக பேசியதாக சரித்திரமே கிடையாது. மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனமாய் தான் இன்னமும் இருக்கிறார். மற்ற எல்லா நற்குணங்களும் இருந்தும் முக்கியமாய் இருக்க வேண்டிய பணிவும் இன்சொல் இல்லாத தானால்

பால் பாத்திரத்திலுள்ள சிறு களிம்பினால் கறந்து வைத்த மொத்த நல்ல பாலும் கெட்டு போவது போல மற்ற எல்லா நற்குணங்களும் ஓளி யிழந்து போய் விடுகின்றன.

தமிழகத்தில் உள்ள சில அரசியல் வாதிகளையும் நாம் இந்த குறளுக்கு உதாரணமாக நாம் கொள்ள முடியும்.

இனியவை கூறல் (10) – 100 Sweet Words

இனியவை கூறல் (10) – 100   Sweet Words

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்ப காய்கவர்ந் தற்று..

Leaving ripe fruits the raw he eats      100

Who speaks harsh words when sweet word suits

விளக்கம் :  நம் நடைமுறை வாழ்க்கையில் நாம் உபயோகிக்கும் வார்த்தை பிரயோகத்தில் கடுஞ்சொற்களை பிரயோகித்தல் , தோட்டத்தில் நல்ல சுவையான பழுத்த பழங்களை விடுத்து கச்சல் காய் சாப்பிடுதலுக்கு சமம்

விரிவாக :

குறிப்பாக ஏன் திருவள்ளுவர் இந்த குறளை தன் நூறாவது குறளாக வைத்துள்ளார் என்று பார்ப்போம், ஒரு நோயாளி மருத்துவரிடம் போகும் போதும் அந்த மருத்துவர் கூறும் ஆதரவு சொற்களே நோயாளிக்கு ஆரோக்கியமடைய உதவுகிறது, ஒரு வியாபாரிக்கு தன் சொற்களே அவருக்கு பெரிய முலதனம், தன் நிறுவனத்திற்கு வந்து கொள்முதல் செய்யும் பயனாளிக்கு அவர் வரவேற்கும் வார்த்தை பிரயோகத்திலேயே பாதி வியாபரத்தை இலாபகரமாய் முடிக்கிறார்.

தற்போதைய நடைமுறை வாழ்க்கையில அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் நாம் இனிய சொற்கள் கொண்டு பேசி நம் பரிவர்த்தனைகளை செய்வோமானால் நம் செயலில் நிச்சயமாக பாதி வெற்றியை அடைந்து விடுவோம். ஒரு கடினமான இதயத்தையும் நல்ல சொல்களால் நம்மால் நெகிழ்வடைய செய்யமுடியும்,

 

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அவசரகதி போக்கில் நாம் உபயோகிக்கும் நன்றி, வணக்கம், “ உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் “ போன்ற வார்த்தைகள் நம்மிடம் பரிவர்த்தனை பண்ணுவோர்களுக்கு மன இறுக்கத்தை போக்கி ஒரு இதமான சூழ்நிலையை நிச்சயம் கொடுக்கிறது, முக மலர்ச்சியுடன் நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் நம்மால் நிச்சயமாய் வெற்றி அடையமுடியும்.

சென்னையில் பூர்வீகா” என்ற தொலைபேசி விற்கும் கடைக்குள்( எந்த கிளையிக்குள்) நீங்கள் சென்றாலும் முதலில் அந்த கடையில் விற்பனை பகுதியில் உள்ளவர்கள் உங்களுக்கு தலை குனிந்து கை கூப்பி வணங்கி வரவேற்பார்கள்.

நல்ல சொற்களை விதைப்போம் நம் நந்தவனத்தில் ,

நிச்சயமாய் நமக்கு வசந்தம் கிடைக்கும்.

Highly Effective Peoples use their communications with more soft, sweet and Energetic. They never ever lose their temper and get angry. Their main recipe of success is smile and sweetness in their words.

ஊழ் (38) – 377 Destiny

ஊழ் (38) – 377   Destiny

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

 Who crores amass enjoy but what      377

The Dispenser’s decrees allot

 

விளக்கம் : 

கர்ம வினை செயலை வகுத்த ( பரம்பொருள் / கடவுள்) செலுத்திய வழியல்லால் பெரும் புகழ்,பணம்,பதவி போன்றவை கொண்டு இருந்தும் கூட அதனை அனுபவித்தல் மிக அரிதாகும்.

உதாரணம் : நாம் நடைமுறை வாழ்க்கையில் பல பேரை பார்க்கலாம் ,பிரபல கம்பியூட்டர் கம்பெனி ஆப்பிள் நிறுவனர் . ஸ்டீவ் ஜாப் ( 56 வயது மட்டுமே வாழ முடிந்தது பெரும் பொருள் கொண்டு இருந்தும் அவரால் அதை அனுபவிக்க முடியவில்லை தன் இளமை காலத்தில் மிக வறுமையிலேயே கழித்தார்.) . சென்னையில் பிரபல இனிப்பு கடை கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனர்  இனிப்பே சாப்பிட முடியாது .அவருக்கு நீரிழிவு நோய் ( டையபிடிஸ்). தமிழக பிரபல கட்சி தலைவரால் பகிரங்கமாக ஒரு குந்துமணி பொன் ஆபாரணங்கள் போட முடியவில்லை.

தமிழில் ஒரு சொல்வாடை உண்டு ,

கடவுள் மறுக்கப்பட்டது யாராலும் கொடுக்க முடியாது

கடவுளால் கொடுக்கப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.

எல்லாம் ஊழில் எழுத பட்டுள்ளது.

As per Divine Decree to Individual materialistic possession rights were declared as per his good and bad deed, nothing more or else he can enjoy,

வெகுளாமை(31) – 302 Restraining the Anger

வெகுளாமை(31) – 302   Restraining the Anger

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல் அதனின் தீய பிற.

Vain is wrath against men of force    302

Against the meek it is still worse.

விளக்கம் :

ஒருவர் தான் கொண்ட கோபம் எதிராளியை பொறுத்து எப்படியிருந்தாலும் முடிவில் அழிவைதான் தருகிறது, பலசாலியான எதிராளியாய் இருந்தால் ஒரு விதமாகவும், எதிராளி தன் பலத்திற்கு ஈடு இல்லாதவானாய் இருந்தால் வேறு விதமாகவும் தாக்கும்.

திருவள்ளுவர் , வெகுளாமை அதிகாரத்தில் எல்லா விதமான கோபத்தின் பரிமாணத்தையும் விளக்கி உள்ளார். ஒருவரின் கோபம் செல்லுபடியாகும் இடம் , செல்லுபடியாகதா இடம். ( நாம் வைத்திருக்கும் பணத்தை போல கூறுகிறார்) ,

குறிப்பாக இப்பொழுது பார்ப்போம். ராமாயணத்தில் வாலி , சுக்கீரவன் என்ற வானர சகோதரர்கள் இருந்தனர். வாலி பலவான இருந்தான். அவன் ஒரு வரம் பெற்று இருந்தான் அவனிடம் எவன் சண்டை போடுகின்றானோ எதிராளியின் பாதி பலம் வாலிக்கு வந்து விடும்.

இப்பொழுது அவனின் கோபத்தை பார்ப்போம், ஒரு முறை ஒரு ஒரு மாயாவியிடம் ஒரு குகையில் இருட்டில் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் போது வெகு நாட்களாய் சண்டை முடியாதனாலும், ரத்த ஆறு ஒடியாதனாலும், வாலி இறந்துவிட்டான் என்று எண்ணி தம்பி சுக்கீரவன் குகையின் வாசலை ஒரு பெரிய பாறையை வைத்து அடைத்து விடுவான். இந்த செயலை செய்ய வேண்டாம் என்று அனுமான் எவ்வளவோ சொல்லி பார்ப்பார் சுக்கீரிவனின் பொறாத வேளை கேட்க மாட்டான்.

வாலி அந்த மாயாவியிடன் போர் புரிந்து அவனை கொன்று குகையிலிருந்து வெளியே வர பார்ப்பான். குகை முடியிருக்கும் வெகு கோபமாய் கத்தி அந்த பாறை உடைத்துக் கொண்டு வெளியே வருவான். சுக்கீரிவன் வாலியின் அரசவையில் சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து மஹாகோபம் கொள்வான்.

சுக்கீரிவனை துரத்தி துரத்தி அடிப்பான். எவ்வளவு மன்னிப்பு கேட்டும் விடவே மாண்டான்.

பிறகு ஶ்ரீ.ராமன் துணையுடன் வாலி கொல்ல படுவான். .

இப்பொழுது நாம் திருவள்ளுவர் சொன்னதை ஒரு படக்காட்சியாகவே நாம் பார்த்தோம், வாலியின் கோபம் சுக்கீரிவனிடம் செல்லுபடியாதான் இருந்தது , ஆனால் முடிவில் வாலியின் மரணத்தில் வாயிலை அதே கோபம் தான் திறந்து விட்டது. வாலியின் மனைவி தாரை எவ்வளவோ சொல்லியும் வாலி கேட்கமால் தானே தன் மரண சாசனம் எழுதிக் கொண்டான்.

இப்பொழுது நாம் திருவள்ளுவர் சொன்னதை ஒரு படக்காட்சியாகவே நாம் பார்த்தோம், வாலியின் கோபம் சுக்கீரிவனிடம் செல்லுப

டியாதான் இருந்தது , ஆனால் முடிவில் வாலியின் மரணத்தில் வாயிலை அதே கோபம் தான் திறந்து விட்டது. வாலியின் மனைவி தாரை எவ்வளவோ சொல்லியும் வாலி கேட்கமால் தானே தன் மரண சாசனம் எழுதிக் கொண்டான்.

இறை மாட்சி (39) – 386 THE GRANDEUR OF MONARCHY

இறை மாட்சி  (39) – 386   THE GRANDEUR OF MONARCHY

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.

That land prospers where the king is     386

Easy to see, not harsh of words.

விளக்கம் : எந்த ஒரு தலைவன் அணுகுவதற்கு சுலபமாகவும், தன்னை ஆதரவிற்காக வந்தவர்களிடம் கடுமையேயில்லாத நடைமுறை பரிவத்தனைகளை கொண்டிருப்பானால் அவன் ஆளுக்கின்ற அல்லது வகிக்கும் பதவிக்கு ஒரு கேடு வராது.

குறிப்பாக :

நாம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களோ, அல்லது  முக்கிய காரியதஸ்தர்களை நாம் கணக்கில் கொண்டால் இந்த அனுகுமுறை நன்கு விளங்கும். ஒரு முறை ராஜிவ் காந்தி முதன் மந்திரியாய் இருக்கும் போது வெளியுறவு காரியதரிசியாய்  A.P. வெங்கடேஸ்வரன் இருந்தார். அப்பொழுது ஒரு மீட்டிங்கில் பாகிஸ்தான் நிருபர் முதன் மந்திரியின் பாகிஸ்தான் விஜயம் பற்றி கேட்டார், அதற்கு தற்போதைய சமீபத்திய நிகழ்வு  எதுவும் இல்லை என்று வெங்கடேஸ்வரன் சொல்ல.. அதையே  ராஜிவ் காந்தியிடன் கேட்க போக அதற்கு.”  Soon you will see  talking to new foreign secretary “ என்று ஆணவத்துடன் சொன்னார். ( அது அரசியல் வட்டாரத்தில் ஒரு தலைவனின் ஆணவபோக்கை காட்டியது.)

மற்றொரு முறை  T.N .சேஷன் ,முதன் மந்திரியின் பாதுகாப்பு அதிகாரியாய் இருந்தபோது, அவர் ராஜிவ் காந்தியின் வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்க்க சென்றிருந்தபோது, அவரை வாசலிலே அரை மணிநேரம் காத்திருக்க வைக்க அவர் வெறுத்து போய் , நான் முதன் மந்திரியின் பாதுகாப்பிற்காக போகிறேன் அவர்கள் என்னை காக்க வைக்கிறார்கள் , எக்கேடு கேட்டு போனால் போகிறது என்று திரும்பி சென்று விட்டார்..

ஒரு தலைவனுக்கு இந்த குணங்கள் இருக்குமானால் அதுவே அவன் வீழ்ச்சிக் அதுவே காரணாமாய் அமைகிறது.

ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான குணங்களாக இருக்க வேண்டியது , மிக எளிதாய் அவரை அணுகுதல், தன்னை சார்ந்த உள்ளவர்களிடம் கடுமையாய் இல்லாது இருத்தல்

The Leader who possesses qualities of  easy to approach and friendly with his surrounding peoples, it is his primary success , and it will leads him to achieve great destiny.

Reference :

https://en.wikipedia.org/wiki/A._P._Venkateswaran

The Leader who possesses qualities of  easy to approach and friendly with his surrounding peoples, it is his primary success , and it will leads him to achieve great destiny.

Reference :

https://en.wikipedia.org/wiki/A._P._Venkateswaran

நீத்தார் பெருமை (3) – 22 The Merit of Ascetics

நீத்தார் பெருமை (3) – 22   The Merit of Ascetics

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து,

இறந்தாரை எண்ணிக் கொடற்று.

To con ascetic glory here                22

Is to count the dead upon the sphere.

 விளக்கம் :  முற்றும் துறந்து( பணம், பொருள், மதிப்பு,ஆணவம் என்று எல்லா தீயங்குணங்களை துறந்தவரின்) பெருமை இந்த உலகத்தில் பிறந்து எந்த ஒரு சாதனைகளும் செய்யாமல் இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்த குறளில் ஏன் இறந்தவர்களின் எண்ணிக்கை சொன்னார் ? , பிறந்தவர்களின் எண்ணிக்கை சொல்லவில்லை என்றால், இந்த புவி உலகில் சமுதாயத்தில் பங்களிப்பவர்களில் முக்கியமானவர்கள் இல்வாழ்க்கையின் ஈடுபட்டுள்ளவர்கள். குறிப்பாக – இல்வாழ்க்கை அதிகாரத்தில் பார்த்தால் ,

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை. (42) ( அதிகாரம் – இல்வாழ்க்கை)

 

இந்த குறளில் துறந்தார்க்கு துணை செய்வதே இல்வாழ்க்கை ஈடுபட்டவனின் முக்கியமான கடமையாகும், இந்த கடமையில் இருந்து விலகியவன் எண்ணிக்கை அதிகமாய் இருந்திருக்கலாம். உலகில் பிறந்தவர்களில் சரிசமான விழுக்காடு, துறந்தவர்களாகவும்,உலகியல் பொருளீட்டலில் பங்கு கொள்ளமுடியாதவர்களாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த இல்வாழ்க்கையில் ஈடுபட்டு அவர்களுக்கு உண்டான சமுதாய பொது விதிமுறைகளை கடைபிடிக்கமால் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை விட துறந்தவர்களின் பெருமை அதிகம் என்று பொருள் பட வள்ளுவர் கூறியுள்ளார்.

இல்வாழ்க்கை ஈடுபட்டவனின் சமுதாய விதிமுறைகள் ,சாது சந்நியாசிகளை ரட்ஷித்தல், இறந்தவர்களுக்கு பிதுர் கடமைகள்,, அபலைகளை ரட்ஷித்தல் போன்றவையாகும்.

The Valuation of Ascetic or worldly Desire less Individual is much higher than to total count of Individuals who died without performing their set on duties in this world

தெரிந்து வினையாடல் (52) – 513 Testing and Entrusting

தெரிந்து வினையாடல்  (52) – 513   Testing and Entrusting

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.

Trust him in whom these four you see     : 513

Love, wit, non-craving, clarity…. 

விளக்கம் : எந்த ஒரு தனி மனிதர் அன்பும், அறிவும், நல்ல தெளிவான சிந்தனையும், அதீதமான ஆசையில்லாமை போன்ற குணங்கள்  நன்கு உடையாராவானால் அவரை நம்பி எந்த ஒரு செயலையும் நாம் நம்பி ஒப்படைக்கலாம்.

குறிப்பாக :

பொது காரியங்கள் , அரசாங்க பொறுப்புக்களை செய்ய முயல்பவர்களுக்கு மேற்கூறிய பண்புகள் மிக அவசியம், அறிவும், அன்பும் நல்ல தெளிவான சிந்தனை கொண்டவராய் இருப்பார் ஆனால் அதீதமான பேராசை கொண்டவராய் இருப்பாரானால் ,இந்த குணங்களை கொண்டு இருந்தும் போராசையால் எல்லாம் வீணாய் விடும்.  தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளை நாம் அடையாளம் கொள்ளமுடியும். மேற்கூறிய நான்கு குணங்களும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அத்தியவசியமான குணங்களாக கருதப்படுகிறது.  உதாரணத்திற்கு  அடால்ஃப் ஹிட்லருக்கு அறிவும், தெளிவான சிந்தனையும் ,சுயபேராசை இன்மையும் கொண்டுதான் இருந்தார், ஆனால் அவரிடம் அன்பு இல்லை..

மேலும், தான் ஜெர்மனியா என்ற ஒரு பேராரசாக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.. ஆனால் முடிவில் அவர் எடுத்துக்கொண்ட செயலை அவரால் முடிக்க முடியாமலேயே போனார்.

Love, Knowledge, Clarity and desire less is prime qualities of achievers, if we entrust such a person to governance of Nation it will be right decision.

கல்லூரியில் தேர்வு

கல்லூரியில் தேர்வு

அமெரிக்காவில் ஒரு பிரபல கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்கள் சுகமாக வாரயிறுதி நாட்களை மது அருந்திக் கொண்டும் கேளிக்கையில் ஈடுபட்டும் கழித்தனர் , மறுநாள் கல்லூரியில் அரை ஆண்டு தேர்வு (Internal Assessment Exam) இருந்தது.. நான்கு மாணவர்களும், ஒரே வகுப்பில் படிப்பவர்கள். நாம் ஏதவாது ஒரு காரணத்தை புரொபசரிடம் சொல்லி தேர்வினை தள்ளி போடலாம் என்று யோசித்து , ஒரு முடிவிற்கு வந்தனர்.

“நாங்கள் நால்வரும் முன்னிரவில் காட்டு வழிப் பாதையில் காரில் போய் கொண்டு இருக்கும் போது வண்டி பஞ்சர் ஆகி விட்டது ”, அதனால் எங்களால் தேர்விற்கு சரியாக எங்களை தயார் பண்ண முடியவில்லை என்று காரணத்தை ஒட்டு மொத்தமாக நால்வரும் புரொபசரிடம் போய் முறையிட்டு பரிட்ஷை மாற்றி அமைக்கும் வேண்டி கேட்டுக் கொண்டனர்.

புரொபசர்க்கு சற்று சந்தேகம் எல்லாரும் பொய் சொல்லுகிறார்கள் என்று அனுமனித்தார்.

இன்றே கடைசி நாள் கல்லூரியில் அரைஆண்டு பரிட்சை முடிக்க வேண்டும் என்று பிரின்ஸ்பால் வேறு கடுமையாக கூறிவிட்டார் என்று சொல்லி

சரி உங்களுக்குக்காக, நான் மிக எளிதாக தேர்வினை வைக்கிறேன்

இரண்டு கேள்விகள் தான் ,

( ஒரு கேள்விக்கு 35 மதிப்பெண், மற்றொரு கேள்விக்கு 65 மதிப்பெண்)

புரொபஸர் கேள்விகளை தயாரித்து எல்லோரையும், தனியாய் அமர செய்து கேள்வி தாளை கொடுத்தார். பின்வரும் கேள்விகள் தான் அது

  1. அவர்களின் பாடத்திட்டத்திலிருந்து ஒரு கேள்வியும் ( 35 மதிப்பெண்கள்)
  2. நீங்கள் நேற்று சந்தித்த கார் விபத்தில் உங்கள் காரில் எந்த டயர் பஞ்சர் ?     ( 65 மதிப்பெண்கள் )

இடது புற முன் சக்கரமா ? வலதுபுற முன் சக்கரமா ?

இடது புற பின் சக்கரமா ? வலதுபுற பின் சக்கரமா ?

நான்கு இளைஞர்களும் இப்பொழுது மொத்தமாக குழம்பி போய் இருந்தனர்.

( நான்கு பேர்களும் ஒரே பதிலை எழுதினால் தான் மட்டுமே நால்வரும் தேர்ச்சி பெற முடியும், முவர் ஒரே பதிலை சொன்னாலும் ஒருவர் தோல்வி அடைவர்.

இருவர் ஒரே பதிலை எழுதினாலும் மற்ற இருவரும் தோல்வி அடைவர்.

அல்லது எல்லோரும் தோல்வியை தான் அடைவர்.

இந்த முறையின் புரொபஸர் கேட்பார் என்று ஒரு அனுமானிக்க கூட அவர்களால் முடியவில்லை.

மாணவர்கள் ரொம்ப குழம்பி போய் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு புரொபஸரிடம் மன்னிப்பு கேட்டனர்.

( புத்தகத்தில் படித்த தகவல் – Prisoners Dilemma (மனோத்ததுவ ரீதியாக உண்மை அறியும் முறை ) / Non Sum Zero Game

துறவு (35) – 345 Renunciation

துறவு (35) – 345   Renunciation

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.

Why add to bonds while this body    345

Is too much for saints to be birth-free.

விளக்கம் :  தனக்கு என்று எதையும் வேண்டாதவர்களுக்கு, அவர்களின் தேக நிலை கூட ஒரு மிகையாகும். அவர்களுக்கு நிச்சயமாக இந்த பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுதலை கிடைக்கும்.

விரிவாக :

இந்த புவி உலகில் எந்த ஒருவர் தனக்கென்று ஒரு தேவையும் வேண்டுதலும் இல்லாமல் இருப்பார் என்றால் அவருக்கு எந்த துன்பமோ , அல்லது இன்பமோ கூட எந்த உணர்வையும் கொடுக்க முடியாது, அவர்களின் ஸ்துல சாரீரத்திற்கும், சூட்சும சாரீரத்திற்கும் எந்த பாதிப்பை தருவதில்லை.

இதனை பல ஸத் புருஷர்களின் வாழ்க்கையில் பார்க்கமுடியும், இயேசு கிறிஸ்துவை சிலுவையில அறையும் போது கூட அவருக்கு எந்த வலியை கொடுக்கவில்லை , அவர்களின் தேக நிலை ஒரு தடையாக இருந்ததில்லை. திருவண்ணாமலையில் ரமணர்க்கு கேன்சர் இருந்தது அதற்காக அவர் வருத்த படவோ, கவலை படவோ இல்லை.

தற்கால வாழ்க்கையில் கூட சில மகா புருஷர்களை நாம் காண முடியும்,

 

இந்தியாவில் சமீபத்தில் இறந்த முன்னாள் ஜானாதிபதி.அப்துல் கலாம் வாழ்க்கை கூட பார்க்கலாம் , அவர் ஒரு சாரசரி இன்ஜினியர் பெற்றிருக்க கூடிய சாரசரி இல்லற சுக வாழ்க்கையை கூட முயலவில்லை. பெரிய பதவியிலிருக்கும் போது கூட தாமரையில் மேல் உள்ள தண்ணீர் போல் அந்த பெரிய ராஜ வாழ்க்கையில் பற்றி கொள்ளவில்லை. அவருக்கு இரண்டாவது முறை ஜானாதிபதி பதவி தர மறுத்த போதும் கூட வருத்தமும் கொள்ளவில்லை. எதிலும் பற்று இல்லாமல் வாழ்க்கை நடத்தினார். அவர்கள் ஒரு சொற்பொழிவு நடத்துவதற்கு ஒரு நகரம் போய் இருந்த போது விடுதி அறையின் ( (Traveler Bungalow ) சாவி கிடைக்காமல் போனதால் வாராண்டாவில் ஒரு போர்வை போட்டுக்கொண்டு அவர் காரியதரிசி துணையுடன் படுத்து உறங்கினார். ஒரு பெரிய ஆர்பாட்டமோ, குறைகளை பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.

இவர் போன்ற வாழ்க்கை நடத்துவர்களுக்கு நிச்சயமாக இந்த பிறப்பு , இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை கிடைக்க சாத்திய கூறுகள் அதிகம் உண்டு.

Person who conduct the life with not much like and dislike, for him even his bodily comforts are also too much. He will not encircled in cycle of Birth and death,

பொரூள் செயல்வகை (76) – 754 Ways of Making Money

பொரூள் செயல்வகை (76) – 754   Ways of Making Money

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்று வந்த பொருள்.

The blameless wealth from fairest means        754

Brings good virtue and also bliss..

 

விளக்கம் :  தனக்கும் தன் சுற்றத்தாருக்கும் இன்பத்தையும், அறத்தை பிறழாது, பிறருக்கு அல்லது, சமுகத்திற்கு தீங்கு செய்யது வந்த பொருளே நிலையானாது, அந்த பொருள் ஈட்டுதலையே சான்றோர்கள் போற்றுவார்கள்

இந்த குறளுக்கு நல்ல உதாரணம் , நவீன கால விளம்பர உத்திகளாலும், வணிக தந்திரங்களாலும் பெரிய , சிறிய, குரு வியாபரிகள், வணிகர்கள்,சேவை புரிபவர்கள் என்று எல்லோரும் தங்களின் வார்த்தை ஜாலத்தினால் சமுகத்திற்கு தீங்கு வரவழைக்க கூடிய பொருள்கள் விற்று பொரூள் ஈட்டுகிறார்கள் அது அறமே இல்லாதது,

 

உதாரணத்திற்கு

 இந்தியாவில் விரைவு சிற்றுண்டி   2 நிமிட நுடுல்ஸ் (மாஃகி ) Nestle Maggie Noodles உலகளவிய ஒரு பெரிய வர்த்தக தொழில் நிறுவனம் தான் ஆனால் அவர்களின் உற்பத்தி பொருட்களில் நச்சுத்தன்மை இருக்கிறது என்று நம் இந்திய அரசாங்கமே ( ஊழலில் பொறையோடிய) தடை செய்கிறது என்றால் எவ்வளவு நச்சுத்தம்மை இருந்திருக்க வேண்டும்.

சமீப காலங்களாக எல்லா இளைஞர்கள்,இளைஞிகளுக்கு தலைமுடி கொட்டுதல் அதிகமாய் இருக்கிறது, இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் அவர்கள் தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூவில் இருக்கும் ரசாயன கலவையே , இதனால் பாதி விழுக்காடு இளைஞர்கள் நிரந்தமான தலைமுடி இழப்பிற்கு ஆளாகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மதுபான விநியோக(TASMAC) துறையும் நாம் இந்த கணக்கில்தான் கொள்ளவேண்டும் அவர்கள் ஈட்டிய வருமானம் ஒரு பாவத்தின் சம்பளமே ஆகும். ( Sin Money)

வள்ளுவர் வழியில் இவர்கள் தொழில் நடத்தி பொருள் ஈட்டியிருந்தால் அவர்கள் தயாரிக்கும் பொருள்களை கொண்டு இந்த சமுகம் மேன்மேலும் வளரும், ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிச்சயாமாய் உண்டாகும்.

Art of Money making is to be guided with Set of Moral ethics and Social Responsibilities. In New era International Corporates are executes the Business to win over in Financial Battle they do all unethical practices such as Bribing, Industrial Espionage, Social Emotional Hijack . These sorts of practices will leads to only total collapse and these fortunes will never last.

கல்வி (40) – 398 Education

கல்வி (40) – 398   Education

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

 

The joy of learning in one birth   398

Exalts man up to his seventh. 

 விளக்கம் : ஒருவர் தன் கவனத்தை  ஒருமுகப்படுத்தி கல்வி கற்பார் ஆனால் அந்த கல்வி அவருக்கு இம்மை மட்டும் அன்றி மறுமையிலும் நிலைத்து நிற்கும்.

இங்கு திருவள்ளுவர் இறப்புக்கு பின் உள்ள மறுபிறவியிலும் இந்த கல்வியின் பாதிப்புகளோ அல்லது பயன்களோ நிச்சயமாக கிடைக்கும் என்கிறார். அவர் ஏழு பிறவிகளுக்கும்  இந்த கல்வியின் பலன்களுக்கு உண்டு என்று பொருள்பட கூறியுள்ளார்.

(குறிப்பாக கல்வி அதிகாரத்தில் உள்ள முதல் குறளில்  கூறியதை கவனத்தில் கொண்டால் எந்த கல்வியை கற்க வேண்டுமோ அதை மட்டும் கற்கவேண்டும் இல்லையேல் அந்த கல்வியின் பாதிப்பு / நற்வினைகளோ, தீவினைகளோ ஏழு ஜென்மத்திற்கும் உண்டு என்று உறுதியாக கூறுகிறார்.

இங்கு சில உதாரணங்கள் பார்க்கலாம். ( இசை மேதை மேண்டலின் சீனிவாசன். கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, )செஸ் விளையாட்டில் பாபி ஃஷ்சர் (Bobby Fischer)  , மற்றும் பல திருக்குறள் அறிஞர்  பால்ய வயதிலிருந்தே தங்கள் கலைகளிலும்,தங்களில் துறைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகிறார்கள். சிலர் கணிதமேதைகளாகவும்,வணிகத்திலும் கூட சிறுவயதிலிருந்து சிறந்து விளங்குகிறார்கள், குறிப்பாக திருக்குறளில் பல திறமைசாலிகள் உள்ளனர். தமிழ் தளிர்களான. உமையாள் மெய்யம்மை , பிரதிக்‌ஷா போன்றவர்களின்  திறமை போன முற்பிறவியின் கல்வி திறமையின்  பாதிப்பாக கூட இருக்கலாம்.

If We study with focused mind and sharp attention our Education will last for Lifetime even for further incarnations too,  we can see so many proof in the cases of child Prodigies like Musician  Mandolin Srinivas, Famous Carnatic Singer Bala Murali Krishna, Chess Player Bobby Fischer, they excel in their infant ages itself.

https://en.wikipedia.org/wiki/Child_prodigy

வெகுளாமை (31) – 303 Restraining Anger

வெகுளாமை (31) – 303   Restraining Anger

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்

 

Off with wrath with any one.     303

It is the source of sin and pain.. 

 

விளக்கம் : எந்த ஒரு தனி மனிதருரிடமோ, அல்லது சமுகத்திடமோ கோபம் கொள்ளமால் இருத்தல் சால சிறந்ததாகும், அவ்வாறு இல்லாமல் கோபம் கொள்வோமானால் அதுவே மற்ற எல்லா தீயகுணங்களுக்கும் அதுவே ஊற்றுக்கண்ணாய் மாறி கேடுகள் உண்டாகும்.

இப்பொழுது நம் மனித இயல்புகளை சற்று நோக்கினால் , மொழியால், மதத்தினால்,சமுதாய உயர்வு தாழ்வு போன்ற காரணங்களினால் கோப உணர்ச்சி மேல் எழும்புதலை காணலாம், அதனால் பல தீயகுணங்களும், செயல்பாடுகளுக்கும்,உடல் மற்றும் மன வேதனைக்கு வழி வகுக்கிறது. மொழிபற்று, மதப்பற்று, தேசப்பற்று எல்லாம் போய் இப்பொழுது வெறியாக மாறுகிறது, அதற்கு முலக்காரணம் ஒரு மனதில் எழும் கோபக்கனலின் நிலைப்பாடே ஆகும்.

 

Anger is the source of all evils, unless we have to offset this character with love and affection, there is no immediate solution, an unconditional love is only instant solution for Anger.

நிலையாமை (34) – 331 Instability

நிலையாமை (34) – 331   Instability

 

நில்லா வற்றை நிலையன என்றுணர்ரும்

புல்லறி வண்மை கடை

 

The worst of follies it is told          331

The fleeting as lasting to hold.

 

விளக்கம் : நிலையில்லாத இந்த உலகில்  தன்னிடம் உள்ள சொத்துகள், பதவி,பொருட்கள்,உறவுகள், செல்வம் போன்றவற்றை நிலையானவை என்று எண்ணியவர்களின் சிற்றறிவினால் மயங்குதல் ,  பட்டைய கல்வி கற்று இருந்தும் கல்லாதவர்களாகவே கொள்ளப் படுவர்.

 

இந்த மாறி வரும் உலகத்தில் எதுவுமே சாஸ்வதமில்லை. சொத்து, பதவி, பொருட்கள், உறவு எல்லாமே அநித்தியம்,

எதை கொண்டுவந்தாய் , எதை எடுத்து செல்வதற்கு என்று பொருட்பட வாழுதலே அறிவுடை செயலாகும்.

இந்த மாய உலகில் அபிமானத்தினால் சிக்கி  பொருட்கள் மீது, பதவி மீதோ பற்று வைத்து அதெல்லாம் நிரந்தம் என்று நினைத்தல் அறிவற்ற செயலாகும்.

 

In Modern Ever changing world everything is impermanent,  such as Power, Wealth , Health, Fame, Pride if we think all these properties are perennial or perpetual it is great ignorance, Even  if Educated person thinks these property are permanent, he is to be considered as illiterate .

 

வாழ்க வளமுடன்..

 

நட்பு (79) – 786 Friendship

நட்பு (79) – 786   Friendship

 

முகநக நட்பது நட்பன்று  நெஞ்சத்தே

அகநக நட்பது நட்பு

 

Friendship is not more smile on face   786

It is the smiling heart’s embrace. 

 

விளக்கம் : முகத்து எதிரில் மட்டும் சிரித்து பேசி பழகி உள்ளத்தில் எந்த நிகழுவும் இல்லாத நட்பானது  நட்பாகாது,

உள்ளத்தில் மகிழ்ச்சியோடு முகமலர்ச்சியோடுடன் கூடிய நட்பே நட்பாகும்.

 

 

விரிவாக :

இந்த நவீன கணிணி உலகில் எல்லோரும்  முகநூல்  ( Facebook ) ல் பல விதமான நட்புகளுடன் வலைய வருகிறார்கள், அதிலும் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் மேட்டுக்குடி மக்கள், நாகரீக நவமணிகள் தங்களின் இணைப்பில்  ஆயிரம் பேர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டு கொள்கிறார்கள்,

 

இந்த நட்பை தான்  திருவள்ளுவர் முன்பே உணர்ந்து இந்த குறளை எழுதினார் போல் உள்ளது.

இந்த முகநூல் நட்புறவானது ஒரு சமுதாய அடையாள தேடலுக்கான  ஒரு வடிகால் மட்டுமே, தன் கருத்தை ஆதரிப்பார்கள் என்று எல்லா வித எழுத்து, கருத்து நாடகங்களை அரங்கேற்றும் நாடகமன்றம் , என் வழி நடப்பவர்கள் (Followers ) , என் கருத்துக்கு ( likes) / dis likes) ஆமோதிப்பவர்கள், ஆதரவு கொடுக்கிறவர்கள் எதிர்ப்பவர்கள் என்று கூறிக்கொண்டு  இருக்கிறார்கள் ,

 

இந்த நட்பானது , புறநட்பாகும்,  இந்த நட்பில் ஒரு அகநெகிழ்வு , அகமகிழ்த்தல்  ஏற்பட சந்தர்பங்கள் வெகு குறைவு.

நவீன உலகத்தில்  நல்ல மனதிறந்து பழக கூடிய நண்பர்கள் அருகித்தான்  போய் உள்ளார்கள், சமுதாய பொருளாதார மாற்றங்களினால் நட்பும் தேய்ந்து விட்டது.

 

இதற்கு உதாரணங்களாக  இரு நட்பை நம் இதிகாசத்தில் பார்க்கலாம்,

 

ஶ்ரீகிருஷ்ணனுக்கும்  சுதாமவான குசேலருக்கும் உண்டான நட்பும்,   எதிர்மறையாக … ( துரோணசாரியார்க்கும்  திரெளபதியின் தந்தையான துருப்பதனுக்கும்  உண்டான பால்ய நட்பை  கொள்ளலாம்.

 

ஒரு நட்பு  பணத்தையோ, பொருளையோ, பொருட்டவே மதிக்கவில்லை.

 

மற்றொரு நட்போ, அதிகாரம், செல்வாக்கு , பரம்பரை என்று பார்த்து , துரோணருக்கும், துருப்பதனுக்கு ஜென்ம பகை வித்திட்டது, , இந்த பகையே தன் பால்ய நட்பை நம்பி துரோணர் போய் துருப்பதனிடம் உதவி கேட்டதனால் வந்தது , துருப்பதன் ஒரு கறவை மாடு கூட கொடுக்க முடியாது என்று கூறி தன் நண்பனை விரட்டியதனால் ஜென்ம பகை சம்பாதித்து கொண்டான்.

 

More Friendship is not is simple lip service with smile and flattery words, The True Friendship is come from heart , and synchronized happiness towards the relationship,  Nowadays, peoples are having Facebook Friendship it is nothing but having Plastic Roses, which never give Fragrance, and Beauty

நட்பு (79) – 788 Friendship

நட்பு (79) – 788  Friendship

 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண்  களைவதாம்  நட்பு.

 

Friendship hastens help in mishaps  

Like hands picking up dress that slips         788

 

விளக்கம் : ,

நம் உடலில் உடுத்தியுள்ள துணி அவிழும் போது தன்னிச்சையாக வேறு எந்த காரியத்தில் ஈடுபட்டு இருந்தாலும், எப்படி கை தன்னிச்சையாக செயல்பட்டு நம்  மானத்தை காக்கிறதோ அது போல ஒருவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் நண்பனின் மனநிலையை குறிப்பால் அறிந்து அவனை பெரும் அவமானத்தில் இருந்தும் இக்கட்டில் இருந்தும் காப்பாற்றுதலே நல்ல நட்பாகும்.

 விரிவாக :

இந்த குறள் பல அத்தியாங்களை உள்ளடக்கியதாகும் , விஞ்ஞானத்திலிருந்து, இதிகாசங்கள் வரை நாம் மேற்கோள் காட்டலாம்.

 

வில்லியனுர் ராமசந்திரன், தமிழ்நாட்டில் பிறந்து  படித்து அமெரிக்காவில் முளை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும் மருத்துவர். அவர்களின் கண்டுபிடிப்பான முளை நரம்புகளில் உள்ள செயல்பாட்டு சமிக்ஞை ”Phantom Limb” “ தமிழில் “மாய கை” (என்று அனுமானமாக கொள்ளலாம்) பற்றி ஆராய்ந்துள்ளார்.

 

அதாவது,  ஏதோ ஒரு விபத்திலோ, அல்லது போரிலோ ஒருவர் தன் கை, அல்லது விரல்களை இழந்து விட்டால், அவரின் சுயநினைவில்லாத போது ஏற்பட்ட இழப்பினால் அவரின் முளைக்கு அந்த இழப்பு பதிவாகமல் இருந்தால், பின் காலங்களில் அவரின் நடைமுறை வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்,

 

குறிப்பாக ஒரு உதாரணம், தன் காலில் ஒரு அரிப்பு ஏற்பட்டால் முளை கைக்கு  காலில் சொரிந்து விடுமாறு சமிக்ஞை அனுப்பும், ஆனால் கையோ, கை விரலோ இல்லை.. அந்த சமிக்ஞை முற்று பெறாமல் மேலும் மேலும் சமிக்ஞை அனுப்பி கொண்டே இருக்கும், முடிவு பெறாத ஒரு சுழலில் முளை சோர்வைடையும் , இந்த நிகழ்வு முளையைச் சோர்வடைச் செய்து  தற்கொலை பண்ணிக்கொள்ள துண்டும் வரை போய் விடும். ராமசந்திரனின் கண்டுபிடிப்பு அந்த குறிப்பிட்ட முளைக்கும் , கையும் இணைக்கும் நரம்பில் ஒரு அறுவை சிகிச்சையோ, அல்லது வேறுமுறையிலோ நிரந்தரமாக அந்த சமிக்ஞைகளை துண்டித்தல்

நாம் இதில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த தன்னிச்சை செயலை போல நல்ல நண்பன்  கை இழந்த ஊமையின் துணி விலகுவதை உணர்ந்து அவனது இக்கட்டை குறிப்பால் அறிந்து அவனின் அவமானத்தை காப்பது போன்ற செயலே நல்ல நட்பாகும்.

இக்கட்டிலிருப்பவனின் முளை ஏற்படும் எண்ண அலைகளை கண்டு அவனுக்கு உடனடியாக உதவுவது தான் நல்ல நட்பாகும்.

 

இதிகாசத்திலிருந்து ஒரு உதாரணம்.

 

ஒரு நிகழ்வு . மஹாபாரத்தில் ஒரு நிகழ்வு.

அங்க தேசத்து மன்னன் கர்ணன் துரியோதனை காண அந்தபுரத்திற்கு வருவான். அப்பொழுது அங்கு துரியோதன் இருக்க மாட்டான், துரியோதனின் மனைவி பானுமதி மட்டும் இருப்பாள், காத்திருந்து காத்திருந்து நேரம் போய் கொண்டு இருக்கும்., கர்ணனும், பானுமதியும் சொக்கட்டான் விளையாடலாம் என்று ஆரம்பிப்பார்கள், ஆட்டம் வெகு ஆக்குரோஷமாக நடக்கும், அப்பொழுது துரியோதன் வந்து நிற்பான் , இவர்கள் அறியமாட்டார்கள். , பானுமதி துரியோதனை கண்டு திடுக்கிட்டு எழ முற்படுவாள் ,

அப்பொழுது கர்ணன் ஆட்டத்தின் உற்சாகத்தில் அவளின் இடை பிடித்து நிறுத்தி இடையில் ஆட்டத்தை நிறுத்தக் கூடாது என்று  நிறுத்துவான். பானுமதியின் இடுப்பில் கட்டியிருந்த முத்துமாலை  அறுந்து முத்துக்கள் சிதறி ஒடும், அப்பொழுது தான் கர்ணன்  துரியோதனை பார்ப்பான். அதிர்ந்து அவமானத்தால் வெட்கி நிற்பான்,

அப்பொழுது துரியோதன் எந்த கோபமோ ,எரிச்சலோ காட்டமால் ,தரையில் விழுந்த முத்துக்களை  பார்த்து கர்ணனிடம் கேட்பான்

பொறுக்கவோ, கோக்கவோ “  என்று ஒரு வசன பிரயோகம் உண்டு

இந்த நிகழ்வுக்கு திருக்குறளுக்கு என்ன சம்பந்தம் ?

துரியோதனின் மனநிலையில் யார் இருந்தாலும் கர்ணன் போன்றவர் செய்த அந்த செயலுக்கு  தன் மனைவி தொட்டதற்கு சிரச்சேதம் செய்து இருப்பான். ஆனால் , துரியோதன் தன் நண்பன் செய்த சிறு தவறை விபத்தாக கருதி , விடுத்தான்.

இதுநாள் வரை கர்ணன் முத்துக்களாய் சேர்ந்து வைத்திருந்த நற்பண்புகளான “ தயாள குணம், போர் திறமை, நல்ல நட்பு எல்லாம் இப்பொழுது சிதறி உள்ளது.  இந்த நிகழ்வு வெளியில் தெரிந்தால் அவனுக்கு மானக்கேடாகும். கார்ணனே கூட தற்கொலை செய்துக்கொள்ள கூடிய அவமான செயலாகும்.

ஆனால் துரியோதனன் எதையும் தன் எண்ணத்தில் கொள்ளமால்

நண்பேண்டா ” என்று எண்ணி இந்த நிகழ்வை ஒரு விபத்தாக கருதி மறந்தான்.

இந்த தருணத்தில் கர்ணன் சேர்ந்து வைத்திருந்த மொத்த நன்மதிப்பும் துரியோதனின் கையில் அறுந்து போன ஒரு முத்து மாலை மணிகளாக இருந்தது, அவன் கோர்த்து திரும்பவும் கர்ணனுக்கு வாழ்வு அளித்தான்.

 

True friendship is like helping the handicapped ,speechless person when suffers, by knowing his thought process. A True friend can understand even a small shift in thoughts of his friend, and he can rescue his friend from all eventualities unknowingly.

 

 

Reference

 

https://en.wikipedia.org/wiki/Vilayanur_S._Ramachandran

நட்பு (79) – 783 Friendship

நட்பு (79) – 783   Friendship

 

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர்  தொடர்பு

 

Like taste in books good friendship grows       783

The more one moves the more he knows. 

 

விளக்கம் : நல்ல புத்தகங்களை முதலில் படிக்கும் போது நமக்கு சரியாக அர்த்தம் புரிவதில்லை, அல்லது உட்கருத்துகளையும், முக்கியமான விஷயங்களை புரியமாலே படிப்போம், பிறகு ஆழ்ந்து படிக்கும்போது நமக்கு பொருள் விளங்கி பயன் பெறுவோம், அது போல நல்ல பண்புடையவர்களின் தொடர்பும்  முதலில் சரிய விளங்க வில்லையானாலும் மேலும் மேலும் நாம் நம் தொடர்ப்பினை விரிவாக்கினால் நமக்கு நல்ல பண்பு பதிவுகள் நிச்சயமாக கிடைக்கும்.

 

விரிவாக :

இந்த குறளில் ஏன் வள்ளுவர் புத்தகங்களை( நூல்கள்) பண்புடையவர்களையும் ஒப்பிட்டு கூறியுள்ளார் என்று பார்த்தால் சில விந்தையான அனுபவங்கள் கிடைக்கும், புத்தகங்கள் வெறும் எழுத்துகளை சுமந்துக் கொண்டு இருக்கிறது, அதன் செய்தி ஒரு வழிபாதையாக தான் இருக்கும் ஆனால் வாசிக்கும் எல்லோருக்கும் ஒரே அனுபவத்தை கொடுப்பதில்லை. படிப்பவர்களின மனோநிலை, அனுபவம், பயிற்சி போன்ற வரையறை ஒட்டி அனுபவங்களும் மாறும், மேலும் நாம் புத்தகங்களை படிப்பதானால் புத்தகங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.

அதுபோல

நல்ல பண்புடையாளர்களிடம், ( குருமார்களும், படித்து முதறிஞர்களும்) ,பழகும் போது  சில விஷயங்களை நாம் அனுபவிக்கலாம், சிலமுறை அவர்கள் கரடுமுரடான செயல்முறைகளுடன் இருந்தாலும், நாம் பார்க்கும் பார்வையிலும், நம் மனோநிலைக்கு ஏற்றவாறு நம்மிடம் பண்பு பதிவுகள் ஏற்படும்,

 

More than the Writer,  a  Reader can find more dimensions of understanding based on his thoughts, in Similar line , if we interact with  Enlightened Personalities  we can get more information as per our mindset and attitude. Like e.g  OshoJ.KrishnamurthyRamanaAnthony De Mello even though their way of communication is bit different, if we deeply involved with them, we can tons of message for our well-being .

இறைமாட்சி (39) – 382 The Grandeur of Monarchy

இறைமாட்சி (39) – 382   The Grandeur of Monarchy

அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும்
ஏஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

Courage, giving, knowledge and zeal   382
Are four failless features royal..

 

விளக்கம் : எதற்கும் அஞ்சாமை – (நாட்டில் ஏதிர் நோக்கியிருக்கும், ) ( பசி, பட்டினி,பிணி,எதிரியின் அச்சறுத்தல்,பணவீக்கம்,பொருளாதார நெருக்கடி,அரசியல் சூழ்ச்சி) போன்றவை கண்டு பயப்படமால் இருத்தல் ),
தன்னிடம் உள்ள பொருள்கள் தானமாக கொடுத்தல்,

அறிவு ( மேன்மேலும் பல புதிய அறிவு சார்ந்த ஞானங்கள் பெறுதல்),

ஊக்கம் ( எந்த நிகழ்வுகளிலும் மனம் தளராமால் இருத்தல்), இந்த நான்கு குணங்களும்  குறையாமல் இருத்தல் புவி ஆளும் வேந்தர்க்கு இயல்பாகவே (தன்னிச்சையாகவே) இருத்தல் வேண்டும், அப்பொழுதுதான் அவன் நாட்டை ஆளும் தகுதியானவன் ஆகிறான் ,

விரிவாக :

நவீன காலத்தில், நாம் எல்லா விதமான ஆட்சி முறையை பார்க்கின்றோம் ( மன்னராட்சி ,மத்திய கிழக்கு நாடான.. சவுதி அரேபியா )  மக்களாட்சி ( இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் )போன்ற நாடுகளில் , திருவள்ளுவர் கூறிய இயல்புகளுடைய தலைவர்களை நாம் பெற்றிருந்தால் நாட்டில் நிச்சயமாக நல்லாட்சி அமைய வாய்ப்புள்ளது.

இந்திய நாட்டின் சில பல முன்னாள் இன்னாள் தலைவர்களிடம் இந்த பண்புகள்தன்னிச்சையாக இருந்ததா ? என்று நாம் ஆராய்ந்தால் பதில் சற்று கடினமாக தான் இருக்கிறது.

சில குணங்கள் மிகுந்தும் , சில குணங்கள் இல்லாமலேயே பல தலைவர்கள் இருந்தனர் / இருக்கின்றனர்.

எல்லா மக்களின் ஆதரவினால் ஒரு கோழையோ, அல்லது அறிவிலியோ அல்லது ஒரு ஊக்கம் குன்றியவன் தலைமை பதவி கொள்வானால் , அந்த நாடு முன்னேற பல தடைகள்
இருக்கும்,

591 வது குறளில் மிகவும் தெளிவாக வள்ளுவர் சொல்லுவார்

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்,
உடையது உடையரோ மற்று.

அறிவிருந்தும்,பொருள் இருந்தும் ,அஞ்சாமை இருந்தும் ,ஊக்கம் இல்லை எனில் எது இருந்தும் ஒரு பிரயோசனமில்லை.

இரண்டாம் புலிகேசி என்று தமிழில் ஒரு திரைப்படம் வந்தது,

மேற்கூறிய எந்த குணங்களும் இல்லாத ராஜாவினால் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று நன்கு காட்டி இருப்பார்கள்.

Leader should have basic Qualities like Courage, Benevolence,
knowledge, zeal on his own without any external support. If we can
find modern day leaders are they possess these qualities, if so
definitely that country will prosperous without fail.

We have all set of Governance, Democracy, Monarchy, Dictatorship, and
Military Rule in Modern world, we can put scanner to identify are
these so leaders possess these mentioned qualities on their own?

அடக்கமுடைமை (13) – 129 Self Control

அடக்கமுடைமை (13) – 129   Self Control

 

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

 

The fire-burnt wounds do find a cure         129

Tongue-burnt wound rests a running sore.

 

விளக்கம் : தீயினால் பெற்ற கஷ்டங்கள் வெகு விரைவில் மறைந்து விடும் ஆனால் சுடு சொற்களினால் ஏற்பட்ட கஷ்டங்கள் எளிதில் மறையாது, என்று பொருள்பட சுடு சொற்களை உபயோகிக்கமல் இருக்கவேண்டும் .

 

விரிவாக :

இந்த குறளை நாம் நேர் மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கலாம்.

 

எதிர்மறை

ராமயாணத்தில்  ஒரு நிகழ்வு நடக்கும், அனுமான்  சாம வேதத்தை நன்கு கற்றறிந்த  ராவணனின்  தர்பாரில் சென்று அவனுக்கு அறிவுரை சொல்ல முயலும் போது அனுமானுக்கு  வாலில் தீ வைக்கப்பட்டு, அந்த தீயினால்  இலங்கையை அழிக்கும் போதும் …

 

ராவணனுக்கு சிறிது கலக்கம் ஏற்பட்டது, பிறகு நவீன சிற்பியான மயனை கூப்பிட்டு இலங்கை புதிதாக நிர்மாணமிக்க கட்டளையிட்டு , மீண்டும் இழந்த இலங்கை பெற்றான். தானும் புத்துணர்வுடன் போருக்கு தயார் ஆனான்.

ஆனாலும் போரில் தன் மகன்கள், தன் நண்பர்கள், தன் தம்பி எல்லோரையும் இழந்த நிலையிலும், தன் பிடிவாதத்தையும், காமத்தையும் காத்தான், சிறிதும் அஹங்காரம் குறையாமால் தன் நம்பிக்கையுடன் போரில் ஈடுபட்டான்.

 

. போரில் படைகள் இழந்த நிலையில் நிராயுதபாணியாய் நின்ற ராவணனை பார்த்து ராமன் “ இன்று போய் நாளை வா” ,என்று கூறி வார்த்தை கேட்டு , நாணி ,கோணி , வேதனை பட்டு, “ கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் ஈழவேந்தன் என்று கம்பர் சொல்வார்..

 

ராவணனுக்கு  தீ சுடவில்லை ஆனால் ராமன்  கோபமில்லாமல் ,சொன்ன ஒரு வார்த்தை அவனை பெரிதும் பாதித்து விட்டது.

 

கலங்கி போய் தன் பத்தினி மாண்டோதரி, மற்றும் மாலினியிடம் போய் வேதனையுடம் ,கோபத்துடனும் போய் முறையிடுவான்.  திரும்பவும் போய் சிவனிடம் போய் வரங்களை பெறவே,  அல்லது வேறு குயுக்திகளை செய்ய கூட அவனுக்கு வலிமை இல்லை, தன் எல்லா சக்தியையும்  இழந்தான்.

 

தீயை விட  சொல் பெரு வலியை தரும்

 

Spoken words are sharper than the mighty Sword.. it can make more damages than  Nuclear weapons, That too when it is spelled by high dignitaries it has multiple effects . ( both in positive and Negative aspects) .